About Us

இந்த கோவிலை 
மாட்சியால் நிரப்புவேன். ஆகாய் 2:7

Infant Jesus Church located in Trichy - Tanjore Main Road near Kattur.

15.07.2007

மேதகு. ஆயர் அந்தோனி டிவோட்டா திருச்சி மறை ஆயர் அவர்களின் தலைமையில் திருப்பலியுடன் குழந்தை இயேசு ஆலய இடம் புனிதம் செய்யப்பட்டு அப்போதைய பங்கு தந்தை அருளானந்தம் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.அனைத்து பணிகளும் முடிந்த பிறகு நவநாள் ஜெபம் துவங்கப்பட்டது. பின்பு ஆலய அபிஷேகம் நடத்தப்பட்டு தினசரி காலை திருப்பலி துவங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது.

15.06.2008

Fr.சகாயராஜா அவர்கள் காட்டூர் பங்கின் பங்குத் தந்தையாக பொறுப்பேற்றபின் கட்டுமான பணிகள் அவரிடம் ஒப்படைக்கபட்டது.


கிறிஸ்துவில்

அருட்திரு அந்தோனி சுந்தர பாண்டியன்

பங்கு தந்தை

06.06.2013 அன்று வியாழன் மாலை 6.00 மணிக்கு மேதகு. ஆயர் அவர்கள் காட்டூர் புனித அந்தோனியார் ஆலய பங்கிலிருந்து அற்புத குழந்தை இயேசு ஆலயத்தை தனிப்பங்காக உயர்த்தி பங்கின் முதல் பங்கு தந்தையாக Fr.S. இன்னாசி முத்து அடிகளாரை நியமனம் செய்தார்கள். அவர் 06.06.2013 முதல் 28.06.2017 வரை நான்கு ஆண்டுகள் பங்குத் தந்தையாக பணியாற்றினார். பிறகு 29.06.2017 முதல் 16.06.2022 வரை பங்கின் இரண்டாவது பங்குத்தந்தையாக அருட்திரு அ.சூசைராஜ் அவர்கள் பணிபுரிந்தார். 16.06.2022 முதல் 30.08.2023 வரை பங்கின் மூன்றாவது பங்குத்தந்தையாக அருட்திரு டென்னிஸ் கில்பர்ட் அவர்கள் பணிபுரிந்தார். 31.08.2023 முதல் பங்கின் நான்காவது பங்குத்தந்தையாக அருள்திரு அந்தோனி சுந்தர பாண்டியன் அவர்கள் பணிபுரிந்து வருகிறார்.