
06.06.2013 அன்று வியாழன் மாலை 6.00 மணிக்கு மேதகு. ஆயர் அவர்கள் காட்டூர் புனித அந்தோனியார் ஆலய பங்கிலிருந்து அற்புத குழந்தை இயேசு ஆலயத்தை தனிப்பங்காக உயர்த்தி பங்கின் முதல் பங்கு தந்தையாக Fr.S. இன்னாசி முத்து அடிகளாரை நியமனம் செய்தார்கள். அவர் 06.06.2013 முதல் 28.06.2017 வரை நான்கு ஆண்டுகள் பங்குத் தந்தையாக பணியாற்றினார். பிறகு 29.06.2017 முதல் பங்கின் இரண்டாவது பங்குத் தந்தையாக அருட்திரு.அ.சூசைராஜ் அவர்களை ஆயர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.